Dr.JEYANTHINI RAJAN

கலாநிதி. ஜயந்தினி விக்னராஜன் இளம் நுண்கலைமாணி, முதுகலை, ஆய்வியல் நிறைஞர், கலாநிதி ஆகிய பட்ப் படிப்புக்களை நிறைவு செய்துள்ளார். சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் முதலாவது இசைத்துறை தலைவராகவும் தற்போது சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகின்றார். இலங்கை, மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், இலண்டண், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கம்போடியா போன்ற பல நாடுகளில் நடைபெற்றுள்ள மாநாடுகளில் அமர்வுத் தலைவராகவும், வளவாளராகவும் மாநாட்டு குழுவின் இணைப்பாளராகவும், நெறியாளராகவும் பங்குபற்றியதுடன் இசைக்கச்சேரிகளையும் நிகழ்த்தியுள்ளார்.  இசைத்தமிழ்திலகம், தெய்வத் தமிழ்ச்சுடர், கலைச்சுடர், ஆய்வுலகச் சிற்பி, சிலப்பதிகார முத்தமிழ் விருது, சிறந்த ஆராய்ச்சியாளர், போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.